×

ஜூன் 1ம் தேதி நடைபெறும் மக்களவை 7ம் கட்ட தேர்தலுடன் விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல்? : இவ்வாரம் அறிவிப்பு வெளியாகிறது!!

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான அறிவிப்பு இவ்வாரம் வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி, உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 6ம் தேதி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து 8ம் தேதி விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. பொதுவாகவே ஒரு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ உயிரிழந்தாலோ அல்லது ராஜினாமா செய்தாலோ 6 மாதத்துக்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும்.அந்த வகையில் தற்போது இந்தியா முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது.

இதில் ஒரே கட்டமாக கடந்த 19ம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. இந்நிலையில் கடைசி கட்ட நாடாளுமன்ற தேர்தல் ஜூன் 1ம் தேதி நடக்கிறது. இத்தேர்தலோடு தற்போது விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தலையும் சேர்த்து நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கான அறிவிப்பை ஒருசில நாட்களில் தேர்தல் ஆணையம் வெளியிடும் என்று கூறப்படுகிறது. இதனால் அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே மக்களவை தேர்தல், 4 சட்டமன்ற தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்படுகின்றன.

The post ஜூன் 1ம் தேதி நடைபெறும் மக்களவை 7ம் கட்ட தேர்தலுடன் விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல்? : இவ்வாரம் அறிவிப்பு வெளியாகிறது!! appeared first on Dinakaran.

Tags : Vikravandi ,Lok ,Sabha 7th phase election ,Bhujawendi ,MLA ,Villupuram district ,Loksabha 7th phase election ,
× RELATED விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி...